காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழந்தார்.
கொரோனா நெருக்கடிக்கு மகாராஷ்டிரா தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
ஏக்நாத் கெய்க்வாட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மும்பை முன்னாள் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவரது மகள் வர்ஷா கெய்க்வாட் தற்போது மாநில கல்வி அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
கெய்க்வாட் மும்பையின் தாராவி தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கூடுதலாக, அவர் 2004-2009 வரை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். மேலும், மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் நேற்று 66,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 44,10,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 6,72,434 பேர் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…