திருப்பதியில் நாளை மற்றும் 17-ம் தேதி மூத்த குடிமக்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம் அனுமதி…
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் ஏராளமான மக்கள் செல்கின்றனர்.அவர்களில் 50 சதவீத மேல் தமிழகத்தை சார்ந்தவர்கள் செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலில் நாளை மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு மாதம் 2 நாட்களுக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதனால் நாளை மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு 1,000 பேரும் , மதியம் 2 மணிக்கு 2,000 பேரும் , மாலை 3 மணிக்கு 1,000 பேரும் என மொத்தம் 4,000 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்கான டோக்கன் திருமலை அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காட்டி பெற்றுக்கொள்ளலாம். மேலும் நாளை மற்றும் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் செய்யஅனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.