பாஜக மூத்த தலைவர் காலமானார்!
பாஜக மூத்த தலைவர் திரிலோச்சன் கனுங்கோ தனது 82 வயதில் புவனேஸ்வரில் காலமானார்.
பாஜக மூத்த தலைவரும், ஒடிசாவின் முன்னாள் எம்.பி.யுமான திரிலோச்சன் கனுங்கோ வயது முதுமை தொடர்பான நோய்களால் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார்.
வயது முதுமை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட 82 வயதான திரிலோச்சன் கனுங்கோ மார்ச் 30ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார். திரிலோச்சன் கனுங்கோ 1971, 1974 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஒடிசா சட்டமன்றத்திற்கும், 1999-இல் ஜகத்சிங்பூரில் இருந்து மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.