பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி.!

டெல்லி : பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
96 வயதான அவர், வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், உடல் சரியில்லா காரணத்தால் மருத்துவமனையின் முதியோர் பிரிவில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிறுநீரகவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில், இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.