உ.பி:’உங்களுக்கு இடமாற்றம் வேண்டுமானால் உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்’ என்று கேட்ட அதிகாரியால் மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில்,தனது மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள் என்று கூறிய பொறியாளரின் வீட்டிற்கு வெளியே மின் கழக ஊழியர் ஒருவர் தீக்குளித்து இறந்துள்ளார்.
உபி காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி,லக்கிம்பூரின் மின்துறையில் பணிபுரியும் மின் ஊழியரான கோகுல் (42) என்பவர், வேலைக்கு சென்று வர தனக்கு அதிக நேரம் ஆவதால் தனது ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர ஷர்மாவிடம் இடமாற்றம் வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால்,லைன்மேன் கோகுலிடம்,பணி இடமாற்றத்திற்காக ரூ.1 லட்சம் தருமாறு ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர ஷர்மா கேட்டுள்ளதாகவும், அது முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள் என்றும் கேட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த மின் ஊழியர் கோகுல்,இன்ஜினியர் நாகேந்திர ஷர்மாவின் வீட்டிற்கு வெளியே தீக்குளித்துள்ளார்.இதனையடுத்து,அவர் லக்கிம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டார்,எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு முன்,தனது அதிகாரி மற்றும் அவரது உதவியாளருக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை சுமத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. மேலும்,கோகுலின் மனைவி,அதிகாரிதான் தனது கணவர் இறப்பிற்கு காரணம் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால்,ஜூனியர் இன்ஜினியர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் தெரிவித்தார்.
இதனையடுத்து,கோகுலின் வாக்கு மூல வீடியோவை அறிந்த மாவட்ட நீதிபதி மகேந்திர பகதூர் சிங், ஜூனியர் இன்ஜினியர் மற்றும் ஜெகத்பாலை இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்தார்.
மேலும்,இந்த வழக்கில் 3 பேர் கொண்ட குழுவால் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.அதன்படி,இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை இக்குழு ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…