PM Modi meeting with ISRO [Image source : ISRO]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 ஆகிய இரண்டு திட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது . இதனை அடுத்து தங்கள் அடுத்தகட்ட பயணங்களை நோக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
நேற்று டெல்லியில் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி துறையினர்,விண்வெளி துறையில் இஸ்ரோவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி விண்வெளி துறையினருக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அக்.21ல் ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, இந்திய விண்வெளித்துறை சார்பாக, விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்க வேண்டும். இதனை 2035க்குள் செயல்படுத்த வேண்டும் என்றும், அதே போல விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், 2040க்குள் நிலவுக்கு இந்தியரை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கான சோதனைகள் வரும் அக்டோபர் 21இல் துவங்க உள்ளது. அன்று 3 ஆளில்லா விண்கலம் மற்றும் 20 முக்கிய விண்வெளி சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது போக வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மார்ஸ் லேண்டர் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது என மத்திய விண்வெளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…