2040க்குள் சந்திரனுக்கு இந்தியரை அனுப்ப வேண்டும்.! பிரதமர் மோடி அறிவுறுத்தல்.!

PM Modi meeting with ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 ஆகிய இரண்டு திட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது . இதனை அடுத்து தங்கள் அடுத்தகட்ட பயணங்களை நோக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று டெல்லியில் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி துறையினர்,விண்வெளி துறையில் இஸ்ரோவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி விண்வெளி துறையினருக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அக்.21ல் ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, இந்திய விண்வெளித்துறை சார்பாக, விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்க வேண்டும். இதனை 2035க்குள் செயல்படுத்த வேண்டும் என்றும், அதே போல விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், 2040க்குள் நிலவுக்கு இந்தியரை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கான சோதனைகள் வரும் அக்டோபர் 21இல் துவங்க உள்ளது. அன்று 3 ஆளில்லா விண்கலம் மற்றும் 20 முக்கிய விண்வெளி சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  இது போக வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மார்ஸ் லேண்டர் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது என மத்திய விண்வெளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்