தேவையெனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் – உச்சநீதிமன்றம் அனுமதி.!
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த விருப்பினால் பல்கலைக்கழகங்கள் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பல்கலைக்கழகம் விருப்பப்பட்டால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளுக்குட்பட்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்புகள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மற்ற செமஸ்டர் தேர்வுகளையும் நடத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.