செம ஐடியா : அடையாளத்தை தெரிந்துகொள்ள புதிய வகை மாஸ்க்.!
கேரளாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் புதிய வகை மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா வைரஸுடன் வாழ பழங்கிக்கொள்ளுங்கள் என்று அரசு தெரிவித்து வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய உலகம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது முகக்கவசம் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக பலரும் வித்தியாசமான புதிய வடிவில் மாஸ்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் புதிய வகை மாஸ்க் ஒன்றை தயாரித்துள்ளார். அதாவது, மாஸ்க்கில் அவரது பாதி முகத்தை பிரிண்ட் செய்து உருவாக்கியுள்ளார். இதன் மூலம் முகக்கவசம் அணிந்து வருபவர் யார் என்று நாம் எளிதில் அடையாளம் தெரிந்துகொள்ள முடியும் என கூறியுள்ளார். இந்த வித்தியாசமான முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும் புகைப்பட கலைஞர் பினூஷ் ஜிபால் தெரிவித்துள்ளார். கோட்டயம் பகுதியில் சொந்தமாக ஸ்டூடியோ வைத்துள்ள இவர், மாஸ்க்கில் முகத்தை பிரிண்ட் செய்ய 20 நிமிடம் போதும் என்றும் ஒரு மாஸ்க் ரூ.60 க்கு விற்பனையாவதாகவும் கூறியுள்ளார். தற்போது 5000 முகக்கவசங்களுக்கு ஆர்டர் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.