புதுச்சேரி சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார்.
பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது.இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து,புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தில்,புதுச்சேரி சபாநாயகர் தேர்தலில் பாஜக சார்பில் எம்.எல்.ஏ.செல்வத்தை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,எம்.எல்.ஏ.செல்வம்,புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில்,புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு செல்வம் அவர்கள்,போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…