மைக்ரோசாப்ட்-இல் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அதனை தெரிவித்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் அதிதீ சிங். இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இந்த இளம் வயதில் இவர் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் இவரை பணியில் சேர்த்து கொண்டது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூலில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். அதற்கு முகநூல் நிறுவனம் இவருக்கு ரூ.5.5 லட்சம் பரிசு தொகையை வழங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிழையை கண்டுபிடித்துள்ளார். அந்நிறுவனத்தில் இருக்கும் ஆர்.இ.சி. என்ற தொலைக்குறியீடு செயல்படுத்துதல் பிரிவின் பிழையை கண்டுபிடித்து அதனை அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதன் காரணத்தால் இந்த இளம் பெண்ணை பாராட்டும் நோக்கத்தில் இவருக்கு 30 ஆயிரம் டாலர் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் 22 லட்சம் ஆகும்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…