தன்னிறைவே தாரக மந்திரம்! – பிரதமர் மோடி

இந்தியா தன்னிறைவு பெறுவதே, ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், இந்தியா விரைவில் தன்னிறைவு பெரும் என்றும், இந்தியா தன்னிறைவு பெற்றால் தான் பிற நாடுகளுக்கு உதவி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா தன்னிறைவு பெறுவதே, ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.