300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இளைஞர் பைக் பறிமுதல்.!
கர்நாடகாவில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவர் மீது வழக்கு மற்றும் வாகனம் பறிமுதல்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது , கொரோனா பரவலை தடக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது சில நாடுகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் கர்நாடகாவில் ஒரு இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார்.
பெங்களூரில் உள்ள electronic city என்ற பாலத்தில் இளைஞர் ஒருவர் 300 கிலோ மீட்டர் வேகத்தில் 1000 சிசி திறன் கொண்ட யமகா பைக்கை ஒட்டி சென்று வீடியோவாக பதிவு செய்து தனது சமூகவலைத் தளபக்கங்களில் வெளியிட்டார், இன்று அந்த வீடியோ சமூகவலைத் தளத்தில் மிகவும் வைரலானது. மேலும் அதற்காக அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் உடனடியாக வீடியோவில் பைக் ஓட்டிய இளைஞர் யார் என்று முகவரி கண்டுபிடித்து அந்த இளைஞர் நடுரோட்டில் வேகமாக சென்றதால் அவரின் மேல் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Bengaluru man touches 299 kmph in his Yamaha 1000 cc bike on Electronic City flyover during #lockdown. CCB cops trace him, slaps case for rash driving @XpressBengaluru @santwana99 pic.twitter.com/OjvThHNVnC
— MG Chetan (@mg_chetan) July 21, 2020