சீக்கிய மதம் தனக்கென படையை உருவாக்கியதைக் குறிப்பது பைசாகி திருவிழா. டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு குருதுவாராக்களில் நேற்று பைசாகி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோபிந்த்சிங் தலைமையில் சீக்கியரின் போர்ப்படை அமைக்கப்பட்டு மொகலாயரின் கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதை பைசாகி குறிக்கிறது.
குளத்தில் புனித நீராடி பொற்கோவிலில் பக்தர்கள் வழிபாடுகளை செய்தனர்.இதே போன்று டெல்லியின் பங்களா சாகிப் குருதுவாராவும் விழாக்கோலம் பூண்டது. புத்தாடை அணிந்து வந்த சீக்கியர் சமூகத்தினர் அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்