செகந்திராபாத் தீ விபத்து, சந்தௌசி விபத்து; நிவாரணத்தொகை பிரதமர் அறிவிப்பு.!
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பல மாடி கட்டிட ஸ்வப்னாலோக் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர், மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சந்தௌசியில் உருளைக்கிழங்கு குளிர்பதனக் கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF to the next of kin of each deceased in the tragedies in Chandausi and Secunderabad. Those injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) March 17, 2023