ஆகஸ்ட் 26-ல் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுவதாக அம்மாநில சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்ததால் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அப்போதைய காங்கிரஸ் அரசு தோற்றதால் மத்திய அரசே நேரடியாக புதுச்சேரிக்கு 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.இதனையடுத்து,தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
இந்நிலையில்,புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 26 ஆம் தேதி கூடுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி வெளியிட்ட தகவலில், “வருகின்ற ஆகஸ்ட் 26-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.இந்த பேரவைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரை நிகழ்த்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தங்கம் விலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.60,000ஐ நெருங்கிய நிலையில். சமீப நாட்களாக ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நாளுக்கு…
சென்னை : கந்தசஷ்டி திருவிழாவின் விரத முறைகள், சிறப்பு பூஜைகள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. திருச்செந்தூர் முருகன்…
சென்னை : தமிழகம் முழுவதும் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை…
அமெரிக்கா : கலிபோர்னியா மாநிலத்தில் 11 வயதான சிறுமி ஒருவர் கண்காட்சிக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு செல்லமாக ஒரு…
இஸ்லாமாபாத் : அமெரிக்காவில் 2-வது முறையாக அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்களுடன்…
சிட்னி : கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தென்னாபிரிக்கா அணியுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும்…