Categories: இந்தியா

காங்கிரஸ், பிஆர்எஸ் இடையே ரகசிய புரிதல்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபைகளுக்கான தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரி சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டியை தெலுங்கானா தேர்தல் களம் எதிர்கொள்கிறது. தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி சந்திரசேகர ராவ் ஹாட்ரிக் அடிப்பாரா? என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவின் ஆளுமை, 9 ஆண்டு கால ஆட்சியின் நலத்திட்டங்களை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறது பி.ஆர்.எஸ். தெலுங்கானா உருவாக காரணமாக இருந்தவர் என்பதால் சந்திரசேகர ராவ் மீதான அதிருப்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம், ஆட்சி மீதான அதிருப்தியும், சிறும்பான்மையினரின் வாக்குகளும் கைகொடுக்கும் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சேரி சர்ச்சை… குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.!

இதுபோன்று, பிரதமர் மோடியின் பிம்பத்தை மட்டுமே முழுமையாக நம்பி பாஜக களமிறங்கியுள்ளது. இதனால் பிரதான கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர்.  எனவே, தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில், பி.ஆர்.எஸ், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களாக அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸுக்கும், பி.ஆர்.எஸ்-க்கும் இடையே ரகசிய புரிதல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் கரீம்நகர் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸுக்கும், பி.ஆர்.எஸ்-க்கும் இடையே ரகசிய புரிதல் இருக்கிறது. தெலுங்கனா சட்டப்பேரவையில் மீண்டும் சந்திரசேகர் ராவ் முதல்வராக காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும். இதனால் காங்கிரஸுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பி.ஆர்.எஸ் கட்சிக்கே செல்லும்.  இதுபோன்று நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க பி.ஆர்.எஸ் கட்சி காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் . காங்கிரஸ், பி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள் ஊழல் மற்றும் குடும்ப அரசியலை ஊக்குவிக்கும். அதனால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Recent Posts

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

26 seconds ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

23 minutes ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

27 minutes ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

1 hour ago

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

2 hours ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

3 hours ago