சொகுசு விடுதியில் இருந்த ரகசிய கேமரா ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல நடிகை

சொகுசு விடுதி மீது பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் Cafe BeHive என்ற சொகுசு விடுதி உள்ளது.இந்த விடுதிக்கு சென்ற பெண் ஒருவர் அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.ஆனால் அங்கு ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த விடுதியில் ரகசிய கேமரா இருந்ததாக அந்த பெண் தனது நண்பர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
Have deleted my previous tweet, as someone pointed out a mistake. Behive, Hinjewadi was filming women in the ladies toilet. This is the limit of perversion. They have to be brought to book. RT widely. @PuneCityPolice pic.twitter.com/sPW7lWLSYS
— TheRichaChadha (@RichaChadha) November 6, 2019
உடனே இந்த தகவல் பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா (Richa Chadda)-விற்கு தெரியவர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவை புனே போலீசாருக்கு டேக் செய்துள்ளார்.
இதற்கு புனே போலீசாரும் பதில் அளித்து உள்ளனர்.அதாவது இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது.இருந்தாலும் சொகுசு விடுதியில் ரகசிய கேமரா இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.