கொரனோ வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் ஏற்கனவே மாணவி ஒருவருக்கு வைரஸின் தாக்கம் இருந்து வரும் நிலையில் தற்போது இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.உகானை மையமாக கொண்டு பரவி வரும் கொரோனா,அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி உள்ளது.இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.ஆனாலும் கொரோனா வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பால் 304 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல இந்த வைரசால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் விளைவாக இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் 2வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவில் இருந்து வந்த மாணவரிடம் நடத்திய சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.எனவே தாக்கம் உள்ள நபரை மருத்துவர்கள் தனி வார்டில் வைத்து தீவிரமாக காண்காணித்து வருகின்றனர்.இதற்கு இடையில் கேரளாவில் 90-க்கும் மேற்பட்டவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் தற்போது வரை 2 நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…