சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர்.! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, விரைவில் நாட்டின் இரண்டாவது விண்வெளி வீரராகும் வாய்ப்பை பெறவிருக்கிறார்.

Indian Astronaut Shubhanshu Shukla

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான ‘முதன்மை’ விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப் கேப்டனும் இந்திய விமானப்படை (IAF) அதிகாரியுமான சுபன்ஷு சுக்லா, இந்த ஆண்டு மே மாதம் நாசாவின் ஆக்சியம் மிஷன் 4 குழுவினருடன் சர்வேதேச விண்வெளிக்குச் செல்வார்.

அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் கூற்றுப்படி, மே 2025 க்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் குழுவினர் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட மாட்டார்கள். மேலும், குழுவினர் 14 நாட்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் தங்கியிருப்பார்கள் என்றும் அது கூறியது.

இதன் மூலம், கடந்த 1984-க்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரர் இவராவார். ஆம், ராகேஷ் ஷர்மாவுக்கு பிறகு விண்வெளி செல்லும் இரண்டாவது இந்தியரான சுக்லா, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். இவரது பயணம் இந்தியாவின் விண்வெளி திறனை உலகிற்கு வெளிப்படுத்தும்.

இந்தப் பயணம் NASA மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். SpaceX நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் புளோரிடாவிலிருந்து புறப்படும் இந்தப் பயணத்தில் சுபான்ஷு சுக்லா விண்கலத்தின் பைலட்டாக பணியாற்றுவார்.

யார் இந்த சுபான்ஷு சுக்லா?

சுபான்ஷு சுக்லா 1985 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்தவர். இவர் தனது பள்ளிப்படிப்பை லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில் முடித்தார். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது, இந்திய ஆயுதப்படைகளில் சேர வேண்டும் என்ற உத்வேகம் அவருக்கு ஏற்பட்டது.

கேப்டன் சுபான்ஷு சுக்லா இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஒரு அனுபவமிக்க சோதனை விமானி ஆவார். இவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியராகவும், ISS-க்கு செல்லும் முதல் இந்தியராகவும் திகழ்கிறார்.

அதனைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமலேயே தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) தேர்வை எழுதி வெற்றி பெற்றார். 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படையில் போர் விமானப் பிரிவில் (Fighter Stream) பணியில் சேர்ந்தார்.

சுக்லா ஒரு திறமையான விமானியாக, Sukhoi-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier மற்றும் AN-32 போன்ற பல்வேறு விமானங்களை இயக்கி சுமார் 2,000 மணி நேரம் பறந்த அனுபவம் பெற்றவர். இவரது இந்த அனுபவமும், திறமையும் அவரை சர்வதேச விண்வெளி பயணத்திற்கு தகுதியானவராக மாற்றியுள்ளது.

விண்வெளி பயணம்

ஆக்ஸியம்-4: SpaceX-ன் டிராகன் விண்கலத்தில் ISS-க்கு சென்று 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்யவுள்ளார்.

ககன்யான்: இந்தியாவின் முதல் மனித விண்வெளி திட்டமான ககன்யான் பயணத்திற்கும் (2026) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்