இந்தியா கேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுவதை தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரையும் போலீசார் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது உத்தரப்பிரதேச காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனால் ஹத்தாரஸ் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ஹத்தாரஸ் ஏற்பட்டுள்ள நிகழ்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது .
இந்நிலையில் டெல்லி காவல்துறை இந்தியா கேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுவதை தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முன் அனுமதியுடன் ஜந்தர் மந்தரில் 100 பேர் வரை கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…