கர்நாடகாவில் குதிரைக்கு நடைபெற்ற இறுதிச்சடங்கு…! ஊரடங்கு விதிமுறைகளை மீறி நடந்த 400 வீடுகளுக்கு சீல் வைப்பு…!
கர்நாடகாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி குதிரையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 400 வீடுகளுக்கு சீல் வைப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பல மாநிலங்களில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அம்மாநில அரசுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பொது முடக்கத்தை மீறி செயல்படும் மக்களுக்கு தண்டனைகளும் பல இடங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடகாவில்,பெலகாவியின் மரடிமத் பகுதியில், கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குதிரை ஒன்று உயிரிந்ததையடுத்து, அந்த குதிரைக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இந்த குதிரை கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், கடசிதேஷ்வர் அசிரமத்துடன் சம்பந்தப்பட்ட குதிரை ஆகும்.
இந்த இறுதிச் சடங்கில், அப்பகுதியில் அருகில் உள்ள பொதுமக்கள் பலர், ஊரடங்கு விதிமுறைகளை மீறி கலந்து கொண்டனர். இதனையடுத்து, அங்கு உள்ள சுமார் 400 வீடுகளுக்கு ஊரடங்கு விதிமுறைகளை மீறி நடந்ததாக கூறி, அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.