மக்களவை தேர்தல் : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் எந்த நிலவரத்தில் இருக்கிறார்கள் என்பதனை பார்க்கலாம்.
ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன்: பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் 49,726 வாக்குளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். முதலிடத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 1,32,374 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
மன்சூர் அலிகான் : வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 606 வாக்குளை பெற்று 7-வது இடத்தில் பின் தங்கி இருக்கிறார்.
விஜய் வசந்த் : கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1,14,936 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கங்கனா ரனாவத் : ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் (பாஜக) சார்பில் போட்டியிட்ட நடிகை 47,3763 வாக்குளை பெற்று முன்னிலை வகிக்கிறார்.
சுரேஷ் கோபி : மலையாள நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் கேரளாவின் திருச்சூரில் போட்டியிட்ட நிலையில், 3,80,655 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…