கொளுத்த போகும் வெயில்…இந்த 3 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வெயிலின் தாக்கம் காரணமாக 3 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் வட மேற்கு மாநிலங்களில், வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
மேலும், பீகார், ஆந்திரா, மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த 3 மாநிலத்திற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
வரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.