கொளுத்தும் வெயில்…சத்தீஸ்கர் மாநிலத்தில் கோடை விடுமுறை நீட்டிப்பு.?!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 26ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவும் வெப்பம் காரணமாக பள்ளிகளின் கோடை விடுமுறையை ஜூன் 26-ம் தேதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக பள்ளிகளை வரும் ஜூன் 16ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோடை விடுமுறையை நீட்டிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த திங்களன்று மாநிலத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 42-44 டிகிரி செல்சியஸ் வரை காணப்பட்டதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.