விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் 4 அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் 4 அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொய் புகாரளிக்க சதி செய்த குற்றச்சாட்டில் சிபிஐயின் மேல்முறையீடு மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி கேரள அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
திருவனந்தபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், அக்., 21ல் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணன் 1994-ல் இஸ்ரோவில் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் நான்கு பேருக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர் நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அதாவது, 1994-ஆம் ஆண்டு உளவு பார்த்த வழக்கில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை சிக்கவைத்த விசாரணை அதிகாரிகளுக்கு 2021-ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக கேரள உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பினார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது 4 வாரங்களுக்குள் தீர்ப்பளிக்குமாறு உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளனர. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…