உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய பிறகு தற்போது தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
மேலும், மூன்றாம் அலை பாதிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் காரணத்தால் மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளை திறப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பல பள்ளி, கல்லூரிகள் தங்களது வகுப்புகளை இணையவழி கல்வியாக மாற்றியுள்ளன.
பல்வேறு மாநிலங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்த வகையில், தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், பீகார், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…