உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு..!

Default Image

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ்  பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய பிறகு தற்போது தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

மேலும், மூன்றாம் அலை பாதிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் காரணத்தால் மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளை திறப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பல பள்ளி, கல்லூரிகள் தங்களது வகுப்புகளை இணையவழி கல்வியாக மாற்றியுள்ளன.

பல்வேறு மாநிலங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்த வகையில், தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், பீகார், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்