கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறப்பதற்கு பஞ்சாப் அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு நாடுகளிலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஏற்கனவே ஜூலை 20-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது இந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக இன்று முதல் பஞ்சாப்பில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் எனவும், மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…