இன்று முதல் பஞ்சாபில் பள்ளிகள் திறப்பு…!

Default Image

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறப்பதற்கு பஞ்சாப் அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு நாடுகளிலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஏற்கனவே ஜூலை 20-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது இந்த ஆகஸ்ட்  மாதம் 10 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக இன்று முதல் பஞ்சாப்பில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் எனவும், மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்