டிசம்பர் 6 முதல் புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்பு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை எப்போது திறப்பது என்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது டிசம்பர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…