புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் – கல்வித்துறை
புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு.
புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடைவெயில் காரணமாக 9 நாட்கள் பள்ளிகள் தாமதாக திறக்கப்பட்டது.
இந்த 9 நாட்கள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்.28-ஆம் தேதி வரை மாதம் 2 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.