கர்நாடகாவில் இன்று 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடக்கம்…!
கர்நாடகாவில் இன்று 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சில மாநிலங்களில் அவ்வப்போது திறக்கப்பட்டாலும், மீண்டும் கொரோனா வைரஸ் அதிகம் பரவத் தொடங்கியதும் பள்ளிகள் மூடப்பட்டு வந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரிகளும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவிக்கையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த அமைச்சர்கள் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிட வலியுறுத்தி உள்ளதாகவும், மாணவர்கள் முறையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மல்லேஸ்வரத்தில் உள்ள நிர்மலராணி மேல்நிலைப்பள்ளியை இன்று நேரில் சென்று முதல்வர் பசவராஜ் அவர்கள் பார்வையிட்டு உள்ளார்.
ರಾಜ್ಯದಲ್ಲಿ 9, 10 ನೆ ತರಗತಿ ಹಾಗೂ ಪದವಿಪೂರ್ವ ತರಗತಿಗಳು ಪುನರಾರಂಭ ಗೊಂಡ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಇಂದು ಮಲ್ಲೇಶ್ವರಂ ನ ನಿರ್ಮಲಾರಾಣಿ ಪ್ರೌಢ ಶಾಲೆಗೆ ಭೇಟಿ ನೀಡಿ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳೊಂದಿಗೆ ಸಂವಾದ ನಡೆಸಲಾಯಿತು.#ಮರಳಿಶಾಲೆಗೆ pic.twitter.com/hWIjfB9HZU
— Basavaraj S Bommai (@BSBommai) August 23, 2021