ஆந்திராவில் திறக்கப்பட்ட பள்ளிகள்! 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. 

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், அணைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நவ.2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதன் பின் தன மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள், முககவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வெப்பநிலை சோதிக்கப்ட்ட பின் தான் வகுப்பிற்க்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிகள் திறந்து 2 நாட்களே ஆன நிலையில், சித்தூரில் 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா, அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்