புதுச்சேரியில் அக்டோபர் 8 முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு.!
புதுச்சேரி மற்றும் காரைக்கலில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8 முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள் நடைபெரும் என்று புதுச்சேரி அரசு நேற்று தெரிவித்துள்ளது.
கல்வி இயக்குநர் ருத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த உத்தரவு வரும் வரை வகுப்புகள் வாரத்தில் ஆறு நாட்களிலும் அரை நாள் மட்டுமே நடைபெறும். அதில், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிப்பவர்கள் வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வர வேண்டும் என கூறியுள்ளார்.
அந்த வகையில், பள்ளிக்கு வருகின்ற மாணவர்கள் தங்களுது பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை கொண்டு வர வேண்டும். மேலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அக்டோபர் 5 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இதற்கிடையில், சானிடிசர் மூலம் கைகளை சுத்தம் செய்யவும், சமூக இடைவெளியை பின்பற்றியும், முக்கவசங்களை அணிந்தும் வர வென்றும் அறிவருத்தப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.