பஞ்சாபில் உள்ள 5 பள்ளிகளுக்கு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் போராட்டங்களில் கலந்துகொண்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களை கவுரவிக்கும் வண்ணம் முக்கியமான சாலைகள், பள்ளிகள் அல்லது பொது இடங்களுக்கு வீரர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கம். அது போல தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது.
இது குறித்து பஞ்சாப் மாநில தகவல் தொடர்பு துறை கூறுகையில், நாட்டை காக்கும் பணியில் தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களை பஞ்சாப் அரசு கவுரவிக்க கடமைப்பட்டுள்ளது. அது தான் பஞ்சாப் அரசின் கொள்கையும். எனவே, பதன்கோட் மாவட்டத்திலுள்ள இரண்டு பள்ளிகள், தார்ன், பதிண்டா மற்றும் பாட்டியாலா ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பள்ளிகள் என மொத்தம் 5 பள்ளிகளின் ஏற்கனவே உள்ள பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு, வீரர்களின் பெயர்கள் சூட்டப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை மந்திரி இந்தர் சிங்லா அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எப்பொழுதும் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும், எனவே அவர்களின் நினைவை போற்றி பாதுக்காக்க வேண்டியது எங்களது உயரிய கடமை எனவும் கூறியுள்ளார். மேலும், அவர்களுக்கு உரிய மரியாதையும் கொடுக்கப்பட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…