பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் – எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா
கொரோனா தொற்று குறைந்துவரும் பகுதிகளில் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, இந்திய குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாக காணப்படுவதாகவும், கொரோனா தொற்று குறைந்துவரும் பகுதிகளில் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கலாம் என்றும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.