தெலங்கானாவில் ஜனவரி 30 வரை பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிப்பு …!

தெலங்கானாவில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்திலும் தற்போது அதிக அளவில் கொரோனா பரவல் காணப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் அறிவித்திருந்தார்.
இருப்பினும் கொரோனா பரவல் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறையை நீடித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை தெலுங்கானா மாநில தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025