அசாமில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு..!
அசாம் மாநிலத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இன்று அசாமில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் நேரடியாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், கல்லூரி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் இணைய முறையில் கல்வி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.