ஆந்திராவில் செப்., 21 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.!
ஆந்திராவில் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை . சில இடங்களில் ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகளையும், கல்லூரிகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தளர்வுகளின் படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் பெற்றோரின் அனுமதி கடிதத்தையும் எடுத்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிஎச்டி படிக்கும் மாணவர்களின் வகுப்புகளும் வரையறுக்கப்பட்ட கட்டுபாட்டுகளுடன் தொடங்கவுள்ளது. அது மட்டுமின்றி பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகளையும், ஜூனியர் கல்லூரிகளையும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று திறந்தவெளி திரையரங்குகளை திறக்கவும், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்கள், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது