குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வருகின்ற நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து குஜராத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.இருந்தாலும், தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதற்கான முடிவை நேற்று அறிவிப்பது குறித்து கருத்துக்களை கேட்ட பின்னர் முடிவு செய்வதாக அம்மாநில அரசு கூறியது.
இது குறித்து, கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா கூறியதாவது,”குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.
அந்த வகையில், “தீபாவளிக்குப் பிறகு, நவம்பர் 23 முதல், அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அந்தந்த வளாகத்தில் கல்வி கற்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்தது. இதற்காக, மத்திய அரசின் நிலையான இயக்க நெறிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மாணவர்களின் வருகை கட்டாயமாக இருக்காது என்றாலும், அரசு வழங்கும் படிவத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல்களைப் பெற வேண்டும் என்று கூறினார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…