ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ‘ராக்கி’ கட்டிய பள்ளி மாணவிகள்..!
ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த ரக்ஷா பந்தன் ஆனது ஆகஸ்ட் 30ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது.
பெண்கள் அவர்களது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக நினைப்பவரின் கையில் மஞ்சள் நூல் கட்டுவது வழக்கம் ஆகும்.
அந்தவகையில், பிரதமர் மோடி டெல்லியில் சிறுமிகளுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடினார். பிரதமர் மோடிக்கு குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகள் பலரும் ‘ராக்கி’ கட்டினர்.