கல்விக்கட்டணம் செலுத்தாததால் மாணவ, மாணவிகளை நீக்கிய பள்ளி..!
மகாராஷ்டிராவில், தனியார் பள்ளி ஒன்று கடந்த கல்வி ஆண்டில் செலுத்த வேண்டிய கட்டண நிலுவைக்காக, 168 குழந்தைகளை பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.
புனே நகரில் ஸீல் அறக்கட்டளை சார்பில் தயாங்கங்கா கான்வென்ட் இயங்குகிறது. இங்கு கடந்த ஆண்டு பயின்ற 168 குழந்தைகளை பள்ளியிலிருந்து நீக்கிய நிர்வாகம், அவர்களுக்கான மாற்றுச்சான்றிதழை தபாலில் அனுப்பியுள்ளது.
இதைக் கண்டித்து, குழந்தைகளும் பெற்றோரும் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். கடந்த கல்வி ஆண்டில் பிள்ளைகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணமும், பத்தாயிரம் ரூபாய் டெபாசிட்டும் செலுத்தியுள்ளதாக அவர்கள் முறையிட்டனர்.
அப்படி இருந்தபோதும் தங்கள் குழந்தைகள் நீக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.