ஒடிசாவில் பள்ளிக்கு சென்ற 26 ஆசிரியர்கள் மற்றும் 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் அரசு தீவிரம்காட்டி வருகிறது. இதனுடன் கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால், பெற்றோரிடம் கருத்து கேட்டு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுப்பதாக கூறப்படு வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த சூழலில் கஜபதி மாவட்டத்தில் பள்ளிக்கு சென்ற 26 ஆசிரியர்கள் மற்றும் 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பிரதீப் குமார் பத்ரா தெரிவித்துள்ளார்.
கொரோனா கண்டறியப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுவதுமாக குணமாகும் வரை பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் யாரும் பீதியடைய வேண்டாம் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…