கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், இன்று(செப்டெம்பர்,21) திறக்கப்படுகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையில், விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு, இன்று முதல், பள்ளிகளை துவக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்புகள் வரை துவங்குகின்றன. இதில் முதற்கட்டமாக, 15 நாட்களுக்கு, வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப, வகுப்புகளை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்.மாணவர்களின் வருகை கட்டாயம் அல்ல; விரும்பும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பாடம் கற்றுக் கொள்ளலாம். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். இதேபோல் டில்லி, குஜராத், கேரளா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கர்நாடகா, பீஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், பள்ளிகள் திறக்கப்படாது என, அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…