பள்ளிகள் திறப்பது எப்போது ? என்று இறுதி முடிவை அரசு அறிவிக்கும் என தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த சமயத்தில் தான் நாட்டில் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தை பொருத்தவரை அங்கு 42496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.13388 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,28705 பேர் குணமடைந்துள்ளனர்.403 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்குஇடையில் அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கொரோனா வைரஸ் காலத்தில் கல்வித்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.இந்த கூட்டத்தில் கல்வித்துறை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதன் பின்னர் முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கூறுகையில்,இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்புகள் ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும். மாநிலத்தில் பள்ளி எப்போது திறக்கப்பட வேண்டும், பாடங்களை எவ்வாறு நடத்த வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இறுதி முடிவை அரசாங்கம் விரைவில் எடுக்கும்.
பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதற்கு யு.ஜி.சி மற்றும் ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதல்களை பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது.அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற அரசு கல்வி நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து ஒரு workshop நடத்துமாறு நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…