பள்ளிக்கட்டணம் தாமதம்! 8 வயது சிறுமியை, தனியறையில் விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.!

Default Image

மும்பையில், 8 வயது சிறுமியை பள்ளிக்கட்டணம் செலுத்தாததால், தண்டனையாக 2 மணி நேரம் தனியறையில் விடப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள சாரதாஷ்ரம் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் பள்ளியில், எட்டு வயதுச் சிறுமி பள்ளிக்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தண்டனையாக, இரண்டு மணிநேரம் தனியறையில் உட்கார வைக்கப்  பட்டுள்ளார்.

மேலும் சிறுமியை தேர்வு எழுதவும் அனுமதிக்கவில்லை. வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தால் சிறுமியின் பெற்றோருக்கு கட்டணம் உரிய நேரத்தில் செலுத்தமுடியாமல் போனது. பள்ளியின் இந்த சம்பவத்தால் தனது மகள், மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் அவள் இப்போது மீண்டும் பள்ளிக்குச் செல்வதில் பயமாகவும், வெட்கமாகவும் இருப்பதாக அவளுடைய பெற்றோர்கள் தெரிவித்தனர். பெற்றோர்கள் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் கல்வித்துறையை அணுகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்