Schoo Bus Vehicles in Haryana [Photo Generated By AI]
ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான தில்லி பப்ளிக் பள்ளியிலிருந்து 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று கடந்த ஜூலை-04 ம் தேதி வியாழன்று ஹிசாரில் உள்ள மேயர் கிராமம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பள்ளிப்பேருந்து அங்கு நின்று கொண்டிருந்த பைக் உட்பட பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற அந்த நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் பேருந்தில் இருந்த மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் செய்தித் தொடர்பாளர் விகாஸ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விபத்தின் முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் பிரேக் செயலிழந்ததால் தான் இப்படி பல வாகனங்களில் மோதியதாக தெரியவந்துள்ளது. அதே நேரம் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 மாணவர்களும், பேருந்து மோதிய காரில் இருந்த 2 பெண்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த கும்பல் ஆத்திரமடைந்து அந்த பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கருதி அவரைத் தாக்கி உள்ளனர்.
அதை தொடர்ந்து அந்த பள்ளி முதலைவரான மஞ்சு பாலா கூறுகையில், ஓட்டுநர் நிதானமாக இருந்ததாகவும், விபத்து குறித்து புகாரளிக்க தன்னை அழைத்ததாகவும் கூறினார். பின் சம்பவ இடத்திற்கு ஊழியர்களுடன் விரைந்து வந்த பள்ளி முதல்வர் காயம் ஏற்பட்ட அந்த பைக் ஓட்டுநரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உலுக்குவதுடன் ஒரு வித பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி பரவி வருகிறது.
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…