வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை உதவித்தொகை.! காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு.!

Default Image
  • டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதியும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வாக்குறுதிகள் வெளியிட்டு வருகிறார்கள்.
  • காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000, வேலையில்லா முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.7500 உதவித் தொகையாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதியும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பின்னர் அவர்களது வாக்குறுதியும் போட்டிபோட்டு கூறி வருகிறார்கள். அந்த வகையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 5,000 ரூபாயும், வேலையில்லா முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7500 ரூபாயும், உதவித் தொகையாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Register of Citizens (NRC), (National Population of Register (NPR) அமல்படுத்தமாட்டோம் என்றும், மாதத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 15 ரூபாய்க்கு உணவு வழங்கும் 100 இந்திரா கேண்டீன்கள் அமைப்பது போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் டெல்லியை முதல் மின்சார வாகன நகரமாக டெவி-டெல்லி மின்சார வாகன முன் முயற்சி வழியாக நாங்கள் மாற்றுவோம் என்றும், இதற்க்கு 15,000 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதாக உறுதியளித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்