ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்து தேர்தல்- வேட்டைக்கு தயாராகும் கட்சிகள்
ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
முதல் கட்டமாக நவம்பர் 30 -ஆம் தேதி ,இரண்டாம் கட்டமாக டிசம்பர் 7 -ஆம் தேதியும்,மூன்றாம் கட்டமாக டிசம்பர் 12-ஆம் தேதியும், நான்காம் கட்டமாக டிசம்பர் 16-ஆம் தேதியும், ஐந்தாம் கட்டமாக டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் டிசம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஜார்கண்டில் பாஜக மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (Jharkhand Mukti Morcha) ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளது.தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு உள்ள கட்சிகள் முழுவீச்சில் தயார்படுத்த உள்ளது.